அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு 21 விடுதிகளும், மாணவியருக்கு 14 விடுதிகளும், பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு விடுதியும், மாணவியருக்கு ஒரு விடுதியும், கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவியருக்கு 4 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவியரும், கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்பயிற்சி நிலையம் (ஐடிஐ) ஆகிய படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர தகுதியுடையவர்கள். 
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். தகுதியுள்ளவர்கள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். 
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதிகளை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் ஜூன் 20-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரையில் ஜூலை 15-ஆம் தேதிக்குள், விடுதிக் காப்பாளர் அல்லது  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  ஒவ்வொரு விடுதியிலும், முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ, மாணவியர் அரசின் இந்தச் சலுகையை பெற்று பயன் பெறலாம்  என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com