பெண் தற்கொலை வழக்கில் விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் உத்தரவு

கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விவசாயிக்கு கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விவசாயிக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரியை அடுத்த  நலகொண்டலப்பள்ளி  கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன்(33). விவசாயி. இவரது மனைவி ராதா (27). இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் காயத்ரி(23). 
இந்த நிலையில், குடும்பத் தகராறில்  ராதாவை சங்கரன் தாக்கியுள்ளார். இதனால், வீட்டிலிருந்து வெளியேறிய  ராதா,  தனது தோழி காயத்ரியின் வீட்டுக்குள் சென்று மறைந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த சங்கரன், தனது மனைவி குறித்து விசாரித்துள்ளார்.
ராதா  அங்கு வரவில்லை என காயத்ரி சொல்லியுள்ளார். இதை நம்பாத சங்கரன், காயத்ரியின் வீட்டுக்குள் சென்று ராதாவை தேடியுள்ளார். அப்போது, ராதா அங்கிருந்ததை அறிந்த, சங்கரன், காயத்ரியைத் தாக்கியுள்ளார். 
இதனால்,  மனமுடைந்த காயத்ரி,  கடந்த 23. 6. 2013 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த மகாராஜகடை போலீஸார், வழக்குப் பதிந்து, சங்கரனை கைது செய்தனர். இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வாசித்தார். இதில், தற்கொலைக்குத் தூண்டியதாக சங்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பெண் வன்கொடுமை வழக்கில் 2 ஆண்டுகள் சிறையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் சி.கலையரசி ஆஜரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com