சத்துணவு ஊழியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 24th June 2019 10:11 AM | Last Updated : 24th June 2019 10:11 AM | அ+அ அ- |

பென்னாகரத்தை அடுத்த நாகதாசம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகதாசம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைவர் ரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் காவேரி நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார். ஒன்றியச் செயலாளர் ஜெயலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
ஒன்றியத் தலைவராக எம்.ஜெயலட்சுமி ,செயலாளராக ஆர்.சரளா, பொருளாளராக மணிமேகலை ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன்
நிறைவுரையாற்றினார்.