சுடச்சுட

  

  ஏரியூர், அரூர் பகுதியில் 10 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு

  By DIN  |   Published on : 26th June 2019 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பென்னாகரம்  அருகே ஏரியூர் வனப் பகுதியில் தேடுதல் வேட்டையின் போது கிடந்த  7 நாட்டுத் துப்பாக்கிகளை ஏரியூர் போலீஸார் மீட்டனர். 
  தருமபுரி மாவட்டம் முழுவதும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் சார்பில் தண்டோரா மூலம்  அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  இந்த நிலையில்  ஏரியூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபுவுக்கு, ஏரியூர் பகுதியில் கள்ளத்தனமாக  நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து  ஏரியூர் அருகே உள்ள ஏர்கோல்பட்டி வனப் பகுதியில்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 7 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார்  மீட்டனர். இதுகுறித்து ஏரியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியூர் பகுதியில் தொடர்ந்து   2- ஆவது முறையாக  நாட்டுத் துப்பாக்கிகளை மீட்டது  குறிப்பிடத்தக்கது.
  அரூரில்...
  கோட்டப்பட்டி  அருகே கேட்பாரற்று கிடந்த மூன்று நாட்டுத்  துப்பாக்கிகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
  தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில்  உள்ள அனைத்து காவல் நிலையங்களின் எல்லைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்கக் கோரி தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  இந்த நிலையில், அரூர் வட்டம், கோட்டப்பட்டி அருகேயுள்ள கல்தானிப்பாடி பெருமாள் கோயில்  அருகில், கேட்பாரற்று 3 நாட்டுத் துப்பாக்கிகள் இருப்பதாக காவல் ஆய்வாளர் பி.ரவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கிருந்த நாட்டுத் துப்பாக்கிகளை மீட்டனர்.  இது குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai