சுடச்சுட

  

  ஊத்தங்கரை அடுத்த கல்லூர் பகுதியில் முறையான குடிநீர் வழங்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
  ஊத்தங்கரை அடுத்த கல்லூர் பகுதியில் 300 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் ஊராட்சி ஆபரேட்டர் முறையாக  தண்ணீர் எடுத்து விடுவதில்லை எனக் கூறி  பெண்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் குடிநீர் வழங்கக்  கோரி  ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்  ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்லாவி - ஊத்தங்கரை செல்லும் சாலையில்  காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை காலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai