அரசுப் பள்ளியில் படைப்பாற்றல் கண்காட்சி
By DIN | Published On : 04th March 2019 08:30 AM | Last Updated : 04th March 2019 08:30 AM | அ+அ அ- |

ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படைப்பாற்றல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற படைப்பாற்றல் கண்காட்சியை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் கல்வியின் படிநிலைகள், பழங்கால நாணயங்கள், கைவினைப் பொருள்கள், எளிய மின் சாதனங்கள், ஓவியங்கள், எளிய வகையான புல்வெட்டி, டெங்கு இல்லா வீட்டை அமைத்தல், சுற்றுப்புற சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகளை, மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தினர். இந்த கண்காட்சியை பிற பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில், அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவித் திட்ட அலுவலர் சூசைநாதன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, ஹரீஸ், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயபால் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.