சுடச்சுட

  

  போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  போச்சம்பள்ளி பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் நாள்தோறும் வந்து செல்லக்கூடிய முக்கிய நகரமாக போச்சம்பள்ளி பேருந்து நிலையம் உள்ளது. 
  இப் பகுதிகளை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால் பேருந்து நிலைய வாளாகத்தில் குடிநீர் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகம் உள்ளது. மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்கு எதிரில் கடைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமித்துள்ளதால் குடிநீர் தொட்டி பயன்பாடின்றி கிடக்கிறது. எனவே, இந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
  இதுகுறித்து சமூக ஆர்வலர் சாந்தகுமார் கூறுகையில், இந்த குடிநீர் தொட்டியானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி கிடக்கிறது. இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வந்தால் பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்களின குடிநீர் தேவை பூர்த்தியாகும். இதனால், காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை இருக்காது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai