சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 17th March 2019 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சு.பிரபாகர் சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.
    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படுகின்றன. இந்த மையத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சு.பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
    அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி, ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. தற்போது, பாதுகாப்பு பெட்டக அறையில் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், மேலும் வி.வி.பேட் இயந்திரங்கள் வைக்கும் இடம் தேவைப்படுகிறது. 
    இதேபோல், ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையத்துக்கான இடமும் தேவைப்படுகிறது.  இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், வாகனங்கள் நிறுத்துவதற்கும், பாதுகாப்பு தடுப்பு அரண்கள் செய்வதற்காகவும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    வாக்குகள் எண்ணப்படும் அறைகளுக்கு அலுவலர்கள் வருவதற்கான வசதியும், வேட்பாளர்கள் சார்பாக வரக்கூடிய நபர்களுக்கும் இட வசதியும், இருப்பு அறையில்  மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வருவதற்கான தனி வழியும் ஆய்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன என்றார்.
    ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai