சுடச்சுட

  

  ஒசூர் தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா போட்டி

  By DIN  |   Published on : 18th March 2019 10:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒசூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா (48) போட்டியிடுகிறார்.
  ஒசூர் நகர தி.மு.க. பொறுப்பாளராக உள்ள இவர் தேன்கனிக்கோட்டையில் பிறந்தார். ஒசூர் ஆர்.வி. அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 
  2001 முதல் 2006 வரை ஒசூர் நகர்மன்ற உறுப்பினராகவும், 2006 முதல் 2011 வரை ஒசூர் நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நகர தி.மு.க. பொறுப்பாளராவதற்கு முன்பு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்தார். சத்யாவுக்கு சட்டப்படிப்பு 4- ஆம் ஆண்டு படித்து வரும் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai