கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: அதிமுக வேட்பாளராக கே.பி.முனுசாமி போட்டி

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.பி.முனுசாமி (66) போட்டியிடுகிறார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.பி.முனுசாமி (66) போட்டியிடுகிறார்.
காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த முனுசாமியின்  தந்தை பூங்காவன கவுண்டர். தாய் மங்கையர்கரசி. மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பை பயின்ற இவர், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படிப்பை முடித்தார். 
காவேரிப்பட்டணம் அதிமுக நகரச் செயலாளராகவும், தருமபுரி மாவட்ட இளைஞரணிச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய இவர் தற்போது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 
1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பிளவுபட்ட போது ஜெயலலிதா அணியில் காவேரிப்பட்டணம் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து 1991, 2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, சட்டத் துறை அமைச்சராக இருந்தார். 
1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com