மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு
By DIN | Published On : 22nd March 2019 08:59 AM | Last Updated : 22nd March 2019 08:59 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை, மக்கள் நீதி மய்யத்தின் தலைமை புதன்கிழமை அறிவித்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் (49) அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினரான இவர், 30.6.1969-ஆம் ஆண்டு பிறந்தார். இளநிலை பட்டப் படிப்பு படித்துள்ளார். சமூக ஆர்வலரான இவர், காரில் தொடர்ந்து 10,218 கி.மீ. தூரம் பயணம் செய்ததற்கான கின்னஸ் சாதனையாளர் விருதாளர். மோட்டார் பந்தய ஆர்வலரும் கூட.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...