Enable Javscript for better performance
ஒசூர் தொகுதி இடைத் தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் தொகுதி இடைத் தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்

    By DIN  |   Published on : 27th March 2019 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். 
    ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட  கடைசி நாளான செவ்வாய்க்கிழமை அ.ம.மு.க. வேட்பாளர் வா.புகழேந்தி,   மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜெயபால்,  தி.மு.க. மாற்று வேட்பாளர் சுகுமாரன், சுயேச்சை வேட்பாளர்களாக ரத்தினம்மா சின்னையா,  ஜான்பாஷா, ஷேக் முனவர், ரத்தினம்மா நாகப்பா,  அமானுல்லா ஆகியோர் ஒசூர் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் விமல்ராஜிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    அ.தி.மு.க.வேட்பாளர் 2-ஆவது முறையாக...
    இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி செவ்வாய்க்கிழமை 2-ஆவது முறையாக மனு தாக்கல் செய்தார்.  திங்கள்கிழமை அவர் மனு தாக்கல் செய்தபோது, அவருடன் 9 பேர் கலந்து கொண்டதாகவும்,  இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும்  தி.மு.க.வினர் புகார் எழுப்பியதைத் தொடர்ந்து,  அவர் செவ்வாய்க்கிழமை 2-ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் என்று கூறப்படுகிறது.  இதேபோல், ஒசூர் நகர்மன்ற முன்னாள் (பொறுப்பு) தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன்  2-ஆவது முறையாக சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.  
    அ.ம.மு.க.வேட்பாளர்...
    அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள  வா.புகழேந்தி மனு தாக்கல் செய்வதற்காக முன்பே வந்துவிட்ட நிலையில்,  சின்னம் தொடர்பான தகவல் மற்றும் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலுக்காக அவர், சார் -ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்சியினருடன் நீண்டநேரம் காத்திருந்தார்.  பின்னர் வேட்புமனு தாக்கல்  முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அவர் தனது வேட்பு மனுவை,  நகரச் செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் விமல்ராஜியிடம் தாக்கல் செய்தார்.  அவரது மாற்று வேட்பாளர்களாக மாதேவா, ரவிச்சந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.  வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர்  வா. புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது:
     ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க., தி.மு.க., இடையே தான் உண்மையான போட்டி.  இதில் அ.ம.மு.க. வேட்பாளராகிய நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai