Enable Javscript for better performance
கிரானைட் பாறை விழுந்ததில்தொழிலாளி பலி- Dinamani

சுடச்சுட

    

    ராயக்கோட்டை அருகே கிரானைட் பாறை விழுந்ததில் வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார். 
    அஸ்ஸாம் மாநிலம் சோனிபூரைச் சேர்ந்தவர் டிசினோகுருமி (20). இவர் கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியில் தங்கி கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பணியில் ஈடுபட்டிருந்த  போது எதிர்பாராதவிதமாக கிரானைட் பாறை சரிந்து அவரின் மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த டிசினோகுருமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர் அஜய்முண்டா அளித்த புகாரின் பேரில் கெலமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai