Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் தேர்தல் பணிகள்:பொதுப் பார்வையாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் தேர்தல் பணிகள்: பொதுப் பார்வையாளர் ஆய்வு

    By DIN  |   Published on : 27th March 2019 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிகள் குறித்து பொதுப் பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
    இந்திய தேர்தல் ஆணையத்தால் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளராக ராம்ராவ் போன்ஸ்லே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கணக்கீட்டுக் குழு, விடியோ கண்காணிப்புக்குழு, மீடியா மையம், ஊடக சான்று மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் சு.பிரபாகர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். 
    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் குறித்த சந்தேகங்களை பொதுப் பார்வையாளரை  6369271353 என்ற எண்ணிலும், அவரது உதவியாளரான விஜயகுமாரை 9442204491 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 
    மேலும் பொதுப் பார்வையாளரை அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் தினமும் சூளகிரி அருகே உள்ள பவர் கிரிடு தங்கும் விடுதியில் காலை 11 மணி முதல் 12 மணி வரையில் நேரில் சந்திக்கலாம் என மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai