Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்டி.டி.வி.தினகரன் 29, 30-இல் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டி.டி.வி.தினகரன் 29, 30-இல் பிரசாரம்

    By DIN  |   Published on : 27th March 2019 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.ம.மு.க.துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மார்ச் 29,  30 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளரும், மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கணேச குமார் தெரிவித்தார்.
    கிருஷ்ணகிரியில்  அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு வளத்தை மேம்படுத்துதல்,  கிருஷ்ணகிரி மக்களின் கனவுத் திட்டமான கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை அமைத்தல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணியை நிறைவேற்றுவது, விவசாய ஏற்றுமதி மையத்தை அமைப்பது போன்ற  வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றார்.
    மேலும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளரான கணேச குமார், ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் புகழேந்தி ஆகியோரை ஆதரித்து, மார்ச் 29- ஆம் தேதி பர்கூரிலும், மார்ச் 30-ஆம் தேதி,  ஒசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆகிய பகுதிகளிலும் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai