Enable Javscript for better performance
சுற்றுலாப் பயணிகளிடம் பறிமுதல்செய்த பணம் திருப்பி ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுலாப் பயணிகளிடம் பறிமுதல் செய்த பணம் திருப்பி ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த மலேசிய பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.1.91 லட்சம் மாவட்டத் தேர்தல் அலுவலர் சு.மலர்விழி உத்தரவின் பேரில் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
    ஒகேனக்கல்லுக்கு மலேசிய சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை இரவு சுற்றுலா வந்தனர். அப்போது,  பென்னாகரம்  மடம் செக்போஸ்ட் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த இளங்கோவன் தலைமையிலான குழுவினர், அவ்வழியாக வந்த சுற்றுலா வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிலிருந்த சரவணராஜ் என்பவரிடம் மலேசிய பணம் (இந்திய மதிப்பில்) ரூ.1,60,880 மற்றும் இந்திய பணம் ரூ.30,515  உள்பட  மொத்தம் 1.91 லட்சத்தை பறிமுதல் செய்து பென்னாகரம்  உதவி தேர்தல் அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்டத் தேர்தல் அலுவலர் சு.மலர்விழியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாவட்ட அளவிலான தேர்தல் குழுவினர் சரவணராஜ் மற்றும் அவருடை நண்பர்களிடம்  விசாரணை நடத்தினர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணம் உள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் சு. மலர்விழியிடம் கூறினர். இதையடுத்து அவரது  உத்தரவின்பேரில் பென்னாகரம்  உதவி தேர்தல் அலுவலர் தேன்மொழி பறிமுதல் செய்த பணத்தை சரவணராஜிடம் ஒப்படைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai