Enable Javscript for better performance
தருமபுரியை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் என்று பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்தார்.
    தருமபுரி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ்  செவ்வாய்க்கிழமை  பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியது:  பென்னாகரம் சட்டப்பேரவைத் தேர்தலில் எனக்குத் தோல்வியை தந்தீர்கள். அதை நான் பாடமாக எடுத்துக் கொண்டேன். தருமபுரி ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற மத்திய ரயில்துறை அமைச்சரை 19 முறை நேரில் சந்தித்து திட்டத்தை கொண்டுவந்துள்ளேன். காவிரி உபரி நீரை வீணாக்காமல் இங்குள்ள ஏரிகளில் நிரப்பி விவசாயிகள் பயன்படுத்துவதற்காக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று அதனை முதல்வரிடம் கொடுத்து திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தேன். முதல்வரும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். தருமபுரியில் சிப்காட் அமைப்பதால் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகி இளைஞர்கள் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் தருமபுரியை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் என்றார். பிரசாரத்தில் அ.தி.மு.க விவசாய பிரிவு மாநிலத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், பென்னாகரம் கூட்டுறவு சங்கத் தலைவர் ரவி, ஒன்றியச் செயலாளர் வேலுமணி, பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் கூட்டணிக் கட்சியினர், பொது மக்கள் என ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai