Enable Javscript for better performance
"நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் பிஎம்சி டெக் பொறியியல் கல்லூரியில்  நீட்  தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
    ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் மாநில 
    அளவிலான நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா பிஎம்சி டெக் கல்வி நிறுவனத் தலைவர்  பெ.பெருமாள் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. பயிற்சி வகுப்பை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பேசியது: 
    மருத்துவ படிப்புக்கான நீட் பயிற்சி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை மாணவர்கள் தகுந்த முறையில் பயன்படுத்தி அனைவரும் தேர்ச்சிப் பெற வேண்டும் என்றார். பிஎம்சி டெக் கல்வி நிறுவன செயலாளர்  குமார், அறங்காவலர் பெ.மலர்,   பிஎம்சி ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் இயக்குநர் பேராசிரியர் சுதாகரன், பொறியியல் கல்லூரியின் முதல்வர்  சித்ரா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர்  பால சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை நாராயணப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
    தமிழ்நாடு மாநில அளவிலான இந்த உண்டு உறைவிட நீட் பயிற்சி வகுப்பில் கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து 260 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 40 நாள்கள் தொடர் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி மார்ச் 25 முதல் மே 3-ஆம் தேதி வரை, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 கருத்தாளர்களை கொண்டு வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர்களுக்கும்,  கருத்தாளர்களுக்கும் தங்கும் மற்றும் உணவு வசதியை பிஎம்சி கல்லூரி நிர்வாகம் செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai