Enable Javscript for better performance
ஒகேனக்கல்லில் புகுந்த சிறுத்தைக் குட்டி வனப்பகுதியில் விடப்பட்டது- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல்லில் புகுந்த சிறுத்தைக் குட்டி வனப்பகுதியில் விடப்பட்டது

    By DIN  |   Published on : 28th March 2019 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒகேனக்கல் தமிழ்நாடு வடிகால் வாரியத்தில் புகுந்த சிறுத்தைக் குட்டியை மூன்று நாள்களுக்கு பின்னர் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத் துறையினர் பிடித்து பத்திரமாக வனப் பகுதியில் விட்டனர்.
    ஒகேனக்கல் கணவாய் பகுதியில் உள்ள தமிழ்நாடு வடிகால் வாரியத்தில் கடந்த 24-ஆம் தேதி இரவு சிறுத்தைக் குட்டி புகுந்ததாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  பென்னாகரம் வன அலுவலர் குணசேகரன் மற்றும் ஒகேனக்கல் கேசவன் தலைமையிலான குழுவினர் வடிகால் வாரியத்தில் தேடி வந்தனர்.
    தொடர்ந்து தேடி வந்த நிலையில் மூன்று நாள்களுக்கு பின் புதன்கிழமை குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து மழைநீர் வெளியேறும் குழாயில் பதுங்கியிருப்பதை அறிந்தனர். பின்னர், குழாயில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறுத்தைக் குட்டியை கூண்டில் பிடித்தனர்.
    இதுகுறித்து வன அலுவலர் குணசேகரன் கூறியதாவது:
    கடந்த 24-ஆம் தேதி ஒகேனக்கல் வடிகால் வாரியத்தில் சிறுத்தைக் குட்டி புகுந்ததாக ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
    பின்னர் மாவட்ட அலுவலர் உத்தரவின்பேரில் கடந்த மூன்று நாள்களாக பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
    பின்பு வடிகால் வாரியத்தில் உள்ள மழைநீர் வெளியேறும் குழாயில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. பின்பு வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் உதவியுடன் பிடிக்கப்பட்டது. 
    இது பெண் சிறுத்தை என்றும், 5 கிலோ எடை கொண்ட இச்சிறுத்தை தண்ணீர் தேடி வந்ததாகவும் கூறினர். பிடிக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி பத்திரமாக மெசல் மடுவு பகுதியில் விடப்படும் என்று கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai