Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல்: 19 வேட்புமனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல்: 19 வேட்புமனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் 19 மனுக்கள் ஏற்கப்பட்டன. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி, 26-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சிகிச்சைகள் என மொத்தம் 35 வேட்புமனுக்கல்  தாக்கல் செய்யப்பட்டன.
    இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு. பிரபாகர் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி, பல்வேறு காரணங்களுக்காக 16 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 19 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.
    அதன்படி, ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் விவரம்:
     (அடைப்புகுறிக்குள் கட்சிகளின் பெயர்)
    அ.செல்லகுமார் (இந்திய தேசிய காங்கிரஸ்), கே.பி.முனுசாமி (அஇஅதிமுக), ந.மதுசூதனன் (நாம் தமிழர் கட்சி), ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் (மக்கள் நீதி மய்யம்) மற்றும் சுயேச்சைகள் என். அஸ்லம ரஹமான ஷெரீப், எஸ்.ஏஜாஸ், ச.கணேசகுமார், டி.வி.எஸ்.காந்தி, கே.குப்பன், மு.குமரேசன், பீ.கோவிந்தன், ஜெ.சுரேஷ்குமார், என்.சீனிவாசன், ஓய்.தேவப்பா, எல்.நாகேஷ், எஸ்.பாலாஜி, எம்.மீனா விந்தேவேந்தன், பெ.வினோத் குமார்,கே.எம்.ராமகவுண்டர் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
    ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனு, திரும்ப பெற  மார்ச் 29-ஆம் தேதி மாலை 3 மணி வரையில் காலம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, இறுதி வேட்பாளர் பட்டியல், அவர்கள் போட்டியிட உள்ள சின்னம் உறுதி செய்யப்படும்.  சுயேச்சையாக அமமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ச. கணேச குமாரின் வேட்புமனுவில் சில குறைபாடுகள் இருந்தை வேட்பு மனு பரிசீலனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
    அந்த விளக்கத்தை ஏற்ற அலுவலர்கள், சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு ஏற்றுக் கொண்டதாக அறிவித்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai