Enable Javscript for better performance
கோயிலில் திருட்டு: இளைஞர் சிக்கினார்- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரையை அடுத்த ஊனாம்பாளையம் கிராமக் கோயிலில் திருடி மறைத்து வைத்த பொருளை மறுநாள் எடுக்க வந்தபோது இளைஞர் சிக்கினார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
    ஊனாம்பாளையம் கிராமம் மாரியம்மன் கோயிலிலிருந்த உண்டியல், பீரோ மற்றும் குத்துவிளக்கு, பூஜை தட்டு ஆகிய பொருள்களை செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    மறுநாள் புதன்கிழமை ஊர் பொதுமக்கள் கோயில் அருகே பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வைக்கோல்போரில் மறைத்து வைத்திருந்த திருட்டுப் பொருள்களை எடுத்துச் செல்ல முயன்றுபோது பொதுமக்கள் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
    விசாரித்ததில் அவர், சின்ன கணக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சொட்ட சேகர் (67) என்பதும், கோயிலில் பொருள்களைத் திருடியவர் என்பதும் தெரியவந்தது. அவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai