Enable Javscript for better performance
பாப்பாரப்பட்டியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பாப்பாரப்பட்டி அருகே தேர்தல் விதியை உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 1.50 லட்சத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட  பணத்தை பென்னாகரம் உதவி தேர்தல் அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தனர். தருமபுரி  மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் முருகன் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி மற்றும் வாத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் பிக்கிலியிலிருந்து பென்னாகரத்துக்கு நான்கு சக்கர சிறிய கனரக வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
    அப்போது பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா மண்டபத்தின் அருகில் மகேஷ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
    அப்போது அவ்வழியாக வந்த சிறிய கனரக வாகனத்தை சோதனை செய்ததில் தேர்தல் விதியை மீறி உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 1. 50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். அதன்பின்பு பறிமுதல் செய்த பணத்தை பென்னாகரம் தேர்தல் உதவி அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai