Enable Javscript for better performance
பெங்களூரு - ஒசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம்: கே.பி.முனுசாமி உறுதி- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு - ஒசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம்: கே.பி.முனுசாமி உறுதி

    By DIN  |   Published on : 28th March 2019 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு - ஒசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.பி. முனுசாமி உறுதியளித்தார்.
    கிருஷ்ணகிரியில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே. அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பா. பாலகிருஷ்ணாரெட்டி, எம்எல்ஏ-க்கள் சி.வி. ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், தேமுதிக கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.டி. அன்பரசன், பாஜக மண்டல பொறுப்பாளர் ஜி.பாலகிருஷ்ணன், பாமக மாநில துணை பொதுச் செயலாளர் சு.ப.குமார், ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, தமாகா நிர்வாகி எம்.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.பி.முனுசாமி பேசியது :
    அதிமுகவினர், கூட்டணி கட்சியினரை அனுசரித்து போக வேண்டும். இந்தியாவில் சிறந்த நிர்வாகி பிரதமர் மோடி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். நீண்ட ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. பெங்களூரு - ஒசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவேன். கிருஷ்ணகிரி வழியாக ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். தென்பெண்ணை ஆற்று உபரி நீரைக் கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்பப்படும் என உறுதியளித்தார். முன்னதாக, கிருஷ்ணகிரியில் அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai