கோடைக் கால கலைப் பயிற்சி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கோடைக் கால இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கோடைக் கால இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி காந்தி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள அரசு அருங்காட்சியகத்தில் கோடைகால இலவச கலைப் பயிற்சி முகாம் மே-6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இலவசமாக நடைபெறும் இந்தக் கலைப் பயிற்சி முகாமில் யோகா, சாக்பீஸ் பொம்மைகள் உருவாக்குதல், ஓவியப் பயிற்சி, களிமண்ணில் உருவங்கள் வடிவமைத்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சி காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும். இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 94434-42991 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com