கிருஷ்ணகிரி மாவட்ட நூலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 05th May 2019 05:18 AM | Last Updated : 05th May 2019 05:18 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட நூலகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 73 பேர் பயனடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நூலகமும், அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்ட நூலக வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை சனிக்கிழமை நடத்தியது. இந்த முகாமை, நூலக அலுவலர் மா.தனலட்சுமி தொடக்கிவைத்தார்.
கண்காணிப்பாளர் க.அருட்செல்வம், முதல்நிலை நூலகர் கோபால்சாமி, நூலகர் நஸ்ரின்பேகம், அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவின் கண் பரிசோதிப்பாளர் கௌரிபிரசாத், ஒருங்கிணைப்பாளர் விக்ரம் உதவியாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த முகாமில், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும், கண் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. முகாமை நூலக பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.
மேலும், மே 5 முதல் 15-ஆம் தேதி வரையில் மாணவ, மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சிகள், மேடைப் பேச்சுக் கலை, மாயாஜாலம் பயிற்சி, ஓவியம், யோகா, கைவினைப் பொருள்கள் தயாரிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...