முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 15th May 2019 08:19 AM | Last Updated : 15th May 2019 08:19 AM | அ+அ அ- |

ஓய்வூதிய சந்தாதாரர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செயலாளர் மாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய மருத்துவக் காப்பீடுத் திட்டம் 2018 - இன் கீழ், ஓய்வூதிய சந்தாதாரர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்க வேண்டும். 80 வயது நிறைந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும். திருத்தி அமைக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும். மாவட்ட கருவூல அலுவலரால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தை தவறாமல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.