5-ஆம் நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோதண்ட ராமர் சிலை
By DIN | Published On : 16th May 2019 09:25 AM | Last Updated : 16th May 2019 09:25 AM | அ+அ அ- |

ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி கிராமத்தில் தென் பெண்ணை ஆற்றில் நீர் அதிகம் செல்வதால் மண் சாலை வழியாக கோதண்ட ராமர் சிலையைக் கொண்டு செல்ல முடியாமல் 5-ஆம் நாளாக சிலை அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையிலிருந்து புதன்கிழமை நிலவரப்படி 408 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றில் அதிகப்படியான நீர்வரத்து இருக்கிறது. இதனால் ஒசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள மண் சாலையில் சிலையைக் கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது பேரண்டப்பள்ளி அருகே தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்வதால் சிலை செல்வது காலதாமதமாகும் எனத் தெரிகிறது.