முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
சிஎம்ஏ ஆடிட்டர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 18th May 2019 08:56 AM | Last Updated : 18th May 2019 08:56 AM | அ+அ அ- |

சிஎம்ஏ ஆடிட்டர் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சிஎம்ஏ படிப்பு உதவி மைய ஒருங்கிணைப்பாளர் சி.ஹரி செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் சிஎம்ஏ ஆடிட்டர் படிப்பு 2019-ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. சிஎம்ஏ ஆடிட்டர் படிப்பானது பவுண்டேசன், இண்டர்மீடியட் மற்றும் இறுதிக்கட்ட படிப்புகளைக் கொண்டது. இந்தப் படிப்பில் சேர பிளஸ்-2 முடித்தவர்கள் பவுண்டேசன் படிப்பில் சேரலாம். சிஎம் ஏ ஆடிட்டர் படிப்புக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தமிழக அரசு மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாட்டில் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு சிஎம்ஏ ஆடிட்டர் படிப்பு முடித்தவர்கள் 4 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடு பெற கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் செயல்படும் சிஎம்ஏ படிப்பு உதவி மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9944330336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.