முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
மினி லாரி மோதியதில் முதியவர் பலி
By DIN | Published On : 18th May 2019 08:54 AM | Last Updated : 18th May 2019 08:54 AM | அ+அ அ- |

மினி லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரம் (85), ஊத்தங்கரை-அனுமன்தீர்த்தம் செல்லும் சாலையில் நடந்து சென்ற போது, வெப்பாளம்பட்டி அருகே பின்புறம் வந்த மினி லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரிக்கு செல்லும் வழியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றதில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.