அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை தொடக்கம்
By DIN | Published On : 18th May 2019 08:53 AM | Last Updated : 18th May 2019 08:53 AM | அ+அ அ- |

ஒசூர் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஒசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்
பிரிவு படிப்புகளுக்கு மே 31 வரை இணையதள மூலம் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 14 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14, உச்ச வயது வரம்பு இல்லை என ஒசூர் அரசு தொழில்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர் சுகுமார் தெரிவித்துள்ளார்.