சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
By DIN | Published On : 23rd May 2019 07:10 AM | Last Updated : 23rd May 2019 07:10 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு தின கருத்தரங்கம் மற்றும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவர் அஸ்கர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஷிபியுல்லா, மாநில பொதுச் செயலாளர் உமர்பாரூக், அனைத்து கிறிஸ்தவர்கள் நலச் சங்க மாவட்டச் செயலாளர் டேவிட் குமரன், ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தீவிரவாத எதிர்ப்பு தின கருத்தரங்கு நடைபெற்றது.