Enable Javscript for better performance
மயக்க மருந்து கொடுத்து இளைஞரை தாக்கியதாக பெண் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மயக்க மருந்து கொடுத்து இளைஞரை தாக்கியதாக பெண் கைது

    By DIN  |   Published On : 28th May 2019 09:48 AM  |   Last Updated : 28th May 2019 09:48 AM  |  அ+அ அ-  |  

    ஊத்தங்கரை அருகே மயக்க மருந்து கொடுத்து இளைஞரை தாக்கியதாக இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
     ஊத்தங்கரையை  அடுத்த கொல்லனூரைச் சேர்ந்த சின்னண்ணன் மகன் சரவணன் (27). பொறியியல் பட்டதாரி.  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும்,  உறவினர் சென்னப்ப நாய்க்கனூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகளுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  சென்னப்ப நாயக்கனூரிலுள்ள பெண்ணை பார்ப்பதற்காக சரவணன் சனிக்கிழமை இரவு சென்றுள்ளார்.  அங்கு சரவணனுக்கு ஜூஸ் கொடுத்துள்ளனர்.  பிறகு வீட்டின் பின்புறம் தனியாக பேசலாம் என்று கூறி சரவணனை அவருக்கு நிச்சயித்துள்ள பெண் அழைத்து சென்றுள்ளார்.  இருவரும் பேசிக் கொண்டிருந்த போது சரவணன்  திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில்காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக  சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 
    இந்தச் சம்பவம் குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட  பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp