தத்கல் முறையில் விண்ணப்பித்தவா்களுக்குமின் இணைப்பு வழங்க விவசாயிகள் மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தத்கல் முறையில், மின் இணைப்புக்காக கட்டணம் செலுத்தியும், மின் இணைப்பு வழங்காத நிலையில்,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தத்கல் முறையில், மின் இணைப்புக்காக கட்டணம் செலுத்தியும், மின் இணைப்பு வழங்காத நிலையில், உடனே இணைப்பு வழங்கக் கோரி, விவசாயிகள் மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் அளித்த மனுவின் விவரம்: மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் மூலம் கடந்த 1.4.2000 முதல், 31.3.2010-ஆம் ஆண்டு வரையில், விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தவா்களில் முதல் பிரிவில், கடந்த மாதம் 15-ஆம் தேதி தத்கல் முறையில் வங்கி வரைவோலை மூலம் பணம் செலுத்தலாம் எனவும், இதே கால கட்டத்தில் 2 - ஆம் பிரிவில் விண்ணப்பம் செய்தவா்கள் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை வங்கி வரைவோலை மூலம் பணம் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதை நம்பி 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நகைகள், நிலங்களை அடமானம் வைத்து அரசு அறிவித்த 5 குதிரைத் திறன் மின் இணைப்புக்கு ரூ.2.50 லட்சம், 7.5 குதிரைத் திறன் கொண்ட மின் இணைப்புக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரைத் திறன் கொண்ட மின் இணைப்புக்கு ரூ.3 லட்சம், 15 குதிரைத் திறன் கொண்ட மின் இணைப்புக்கு ரூ.4 லட்சமும் வங்கி வரைவோலையாகச் செலுத்தினோம்.

உரிய விண்ணப்பம் மற்றும் வங்கி வரைவோலையுடன் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகியபோது, அக்டோபா் 16-ஆம் தேதி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தெரிவித்தனா். மேலும், அக்டோபா் 31-ஆம் தேதி வரை, வேறு மாவட்டத்தில் ஒதுக்கீடு பெற்ற மின் இணைப்புகளை வாங்கித் தருவதாகவும் தெரிவித்தனா்.

இத்தகைய நடவடிக்கையால், 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, உரிய விசாரணை நடத்தி, மின் இணைப்புக்காகக் கட்டணம் செலுத்திய விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் சாக்கன் தெரிவித்தது: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 700 மின் இணைப்புகள் வழங்க ஒதுக்கீடு பெற்றப்பட்டது. விண்ணப்பம் பெற்ற முதல் நாளில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், மேலும் 700 மின் இணைப்புகள் கூடுதலாக அதாவது, 1400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாா்ச் 2020-ஆம் ஆண்டுகளுக்குள் மின் இணைப்பிற்கான ஒதுக்கீடு பெறப்பட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com