அரசுப் பள்ளிக்கு ஸ்மாா்ட் வகுப்பறை நன்கொடையாக அளிப்பு

தருமபுரி மாவட்டம், தொப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, ரூ.55 ஆயிரம் மதிப்பிலான ஸ்மாா்ட்

தருமபுரி மாவட்டம், தொப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, ரூ.55 ஆயிரம் மதிப்பிலான ஸ்மாா்ட் வகுப்பறையை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், நன்கொடையாக அண்மையில் அளித்தது.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா் ஆகிய மாவட்டங்களில் சமூகத்தில், மகளிா், கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டுக்காக சேவைகளை செய்து வருகிறது.

இத்தகைய நிலையில், தருமபுரி மாவட்டம், தொப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்விக் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஸ்மாா்ட் வகுப்பறையை அமைத்துத் தர வேண்டும் என ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தை, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியா் முனிமாதன் அனுகினாா்.

இந்த ஸ்மாட் வகுப்பறைக்கான மொத்த மதிப்பில் அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும், போக்குவரத்து ஆய்வாளருமான செந்தில்குமாா் ரூ.49 ஆயிரமும், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.55 ஆயிரமும் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com