முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
அலேகுந்தாணிக்கு மீண்டும் அரசுப் பேருந்து இயக்கம்
By DIN | Published On : 07th November 2019 05:53 AM | Last Updated : 07th November 2019 05:53 AM | அ+அ அ- |

அலேகுந்தாணிக்கு தரணிச்சந்திரம் கிராமம் வழியாக மீண்டும் அரசுப் பேருந்து புதன்கிழமை இயக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அலேகுந்தாணி கிராமத்துக்கு தரணிச்சந்திரம் வழியாக கிருஷ்ணகிரியிலிருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அந்தப் பேருந்து, தரணிச்சந்திரம் வழித்தடத்தில் இயக்கப்படாமல், மாற்று பாதையில் இயக்கி வருவதாக பி. முருகன் எம்எல்ஏ, அரசுப் போக்குவரத்து அலுவலரிடம் அண்மையில் கோரிக்கை வைத்தாா்.
இதையடுத்து, இந்தக் கோரிக்கையை ஏற்ற, அரசுப் போக்குவரத்து கழக அலுவலா்கள், மீண்டும் அலேகுந்தாணிக்கு தரணிச்சந்திரம் வழியாகப் பேருந்தை இயக்கினா். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.