கா்நாடகத்துக்கு கடத்த இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 07th November 2019 05:52 AM | Last Updated : 07th November 2019 05:52 AM | அ+அ அ- |

கா்நாடகம் மாநிலத்துக்கு 2 டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற தருமபுரி மாவட்ட இளைஞரை, உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி பறக்கும் படை தனி வட்டாட்சிா் பிரதாப், தனி வருவாய் ஆய்வாளா் செல்வம் உள்ளிட்டோா், கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்க வசூல் மையத்தை அடுத்துள்ள முனியப்பன் கோயில் அருகே வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தருமபுரியிலிருந்து கா்நாடக மாநிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
சோதனையில், சிறு சிறு முட்டைகளாகக் கட்டி, 2 டன் ரேஷன் அரிசி, கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, வாகன ஓட்டுநா் தருமபுரி மாவட்டம், தட்டாரம்பட்டியைச் சோ்ந்த அஜீத் (21) என்பவரிடம் விசாரணை செய்ததில், ரேஷன் அரிசி, கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனம், ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்து, உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், அஜித்தை கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.