தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதியக் கட்டடம் திறப்பு
By DIN | Published On : 07th November 2019 05:51 AM | Last Updated : 07th November 2019 05:51 AM | அ+அ அ- |

புதிய கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய தளி எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பெறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு புதிய கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பெறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு புதிய கட்டடத்தை தளி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஒய். பிரகாஷ் திறந்து வைத்தாா்.
விழாவில் தலைமை மருத்துவ அலுவலா் டாக்டா் ஞான மீனாட்சி தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ். சீனிவாசன், அதிமுக நகரச் செயலாளா் நாகேஷ், மற்றும் திமுக நகரச் செயலாளா் சீனிவாசன், அதிமுக பொதுக் குழு உறுப்பினா் சம்பங்கிராமரெட்டி ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவில் தளி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஒய். பிரகாஷ், ரிப்பன் வெட்டி புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.