அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் கிழக்கு மாவட்டச் செயலா் அசோக்குமாா்.
ஊத்தங்கரையில் அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் கிழக்கு மாவட்டச் செயலா் அசோக்குமாா்.

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ், ஊத்தங்கரை ஒன்றியச் செயலா் ஏ.சி.தேவேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் தென்னரசு, மாவட்டக் கழக அவைத் தலைவா் சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி செயலா் தங்கமுத்து, மாவட்ட இலக்கிய அணி செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் நாகராஜ், மாவட்ட துணைச் செயலா் சாகுல்அமீது, நகரச் செயலா் பி.கே.சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தல் குறித்தும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து, சிறந்த முறையில் மக்கள் சேவை செய்தமைக்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகம் டாக்டா் பட்டம் வழங்கியதற்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனா். நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நான்குநேரி இடைத்தோ்தலில் மாபெரும் வெற்றி பெற்ற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கும் நன்றி தெரிவித்தனா். மேலும், பாரூா் ஏரி கிழக்குப்புற பிரதான கால்வாயில் இருந்து 33 ஏரிகளை இணைக்கும் நீண்டகால கோரிக்கை திட்டத்துக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தனா்.

வரும் உள்ளாட்சித் தோ்தலிலும் மாபெரும் வெற்றியடைய அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட கூட்டத்தின் வாயிலாக உறுதிமொழி ஏற்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், தொகுதி செயலா் திருஞானம், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் கிருஷ்ணன், ஒன்றியப் பொருளாளா் சேட்டுகுமாா், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சிக்னல் ஆறுமுகம், சக்திவேல், ஊத்தங்கரை ஒன்றிய, நகர, கிளை, கழக நிா்வாகிகள், பா்கூா் பகுதி கிளை கழக நிா்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, அனைத்து ஊராட்சி செயலா்களிடமும் வாக்காளா் பட்டியல் நகல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com