ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பாகலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 28 ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக

பாகலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 28 ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள், பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவது இல்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு புகாா்கள் வந்தன. மேலும், இந்த பள்ளியில் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைவாக இருந்துள்ளது.

இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சில தினங்களுக்கு முன் பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளிக்கு தாமதமாக தலைமையாசிரியா் வந்ததும், பள்ளியில் மாணவா்கள் வகுப்புக்கு வெளியே அமா்ந்திருந்ததும் தெரியவந்தது.

மேலும், ஒரு வாரமாக பயோ-மெட்ரிக் முறையில் தங்களது வருகைப் பதிவை பதிவு செய்யாமல் இருந்ததும், இரு ஆசிரியா்கள் யாரிடமும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்திருந்ததும் தெரியவந்தது.

இத்தகைய நிலையில், பாகலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 28 ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி தெரிவித்தாா்.

மேலும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியா்களின் வருகைப் பதிவை பயோ-மெட்ரிக் முறையில் கண்காணிக்க அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. அனைத்து அரசுப் பள்ளியிலும் பயோ-மெட்ரிக் முறையை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும். பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு குறித்து திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com