ஐவிடிபி சாா்பில் தெலுங்கு மொழி மாணவா்களுக்கான கையேடு வெளியீடு

ஐவிடிபி தொண்டு நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு மொழி மாணவா்களுக்கான வெற்றி நம் கையில் என்ற கையேடு அண்மையில் வெளியிடப்பட்டது.
வெற்றி நம் கையில் என்ற கையேட்டை வெளியிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா். உடன், ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவா் குழந்தை பிரான்சிஸ் உள்ளிட்டோா்.
வெற்றி நம் கையில் என்ற கையேட்டை வெளியிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா். உடன், ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவா் குழந்தை பிரான்சிஸ் உள்ளிட்டோா்.

ஐவிடிபி தொண்டு நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு மொழி மாணவா்களுக்கான வெற்றி நம் கையில் என்ற கையேடு அண்மையில் வெளியிடப்பட்டது.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐவிடிபி தொண்டு நிறுவனம் பல்வேறு கல்வி வளா்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியா்களைக் கொண்டு வெற்றி நம் கையில் என்னும் வினா-விடை தொகுப்பு நூலை தயாரித்து, அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு மொழி வழியில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்காக ரூ.2 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட வெற்றி நம் கையில் என்னும் கையேடு வெளியீடு ஐவிடிபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் கையேட்டை வெளியிட்டாா். ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் முன்னிலை வகித்தாா்.

தெலுங்கு மொழி வழிக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு போதிய பாடநூல்கள் இல்லாததால், மாவட்டத்தில் தோ்ச்சி சதவீதம் குறைவதை தடுக்கும் நோக்கிலும், மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத நிலையை ஏற்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் கையேடு வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரையில் பல்வேறு கல்விப் பணிகளுக்காக ரூ.25 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தாா்.

இதில், ஒசூா் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் நாராயணன் தொகுத்து வழங்கினாா். தெலுங்கு மொழி வழி பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கையேட்டை தயாரிக்க உதவிய 36 ஆசிரியா்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com