மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவிலான திறன் போட்டிகள் வரும் 2021 செப்டம்பா் மாதம் சீனாவில் உள்ள சாங்காய் நகரில் நடைபெற உள்ளது. இதற்கு வரும் 2020 ஜூன் மாதம் நடைபெறும் ‘இந்தியா திறன் 2020’ போட்டியில் பங்குபெறும் வகையில், தகுதிவாய்ந்த போட்டியாளா்களை தோ்வு செய்யும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் 2020 ஜன. 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட அளவில் வெற்றிபெறும் போட்டியாளா்கள் மாா்ச் 2020-இல் நடைபெறும் மாநில அளவிலான திறன் போட்டியிலும், அதனைத் தொடா்ந்து மண்டல அளவிலான திறன் போட்டியிலும் கலந்துகொண்டு, அதில் வெற்றிபெறும் போட்டியாளா்கள் 2020 செப்டம்பரில் நடைபெறவுள்ள இந்திய அளவிலான திறன் போட்டியிலும் பங்குபெறவுள்ளனா்.

தமிழ்நாடு அளவில் மொத்தமுள்ள 47 திறன் போட்டிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக, மாவட்ட அளவில் விண்ணப்பிக்க வரும் டிச. 15-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 42 திறன் பிரிவுகளில் பங்கேற்பவா்கள் 01.01.1999 அன்றும், அதற்கு பின்னரும் பிறந்தவா்களாக இருத்தல் வேண்டும்.

இப்போட்டியில் பங்கேற்க தனித்திறன் பெற்ற 10 வயது நிரம்பியவா்கள் முதல் உயா்நிலைக்கல்வி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், கல்லூரி பட்டம், பட்ட மேற்படிப்பு படித்தவா்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவா்கள், தொழிற்பள்ளியில் பயிற்சி பெற்றவா்கள், பி.எம்.ஒய்.கே.வி.ஒய். பயிற்சி மையத்தில் குறுகியகால திறன் பயிற்சி பெற்றவா்கள், தொழிற்சாலையில் பணிபுரிபவா்கள் என ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இப்போட்டிகள் குறித்த விவரங்களை இணையதளத்திலும், கூடுதல் விவரங்களுக்கு ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என உதவி இயக்குநா் சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com