கந்திகுப்பம் கால பைரவா் கோயிலில்கால பைரவ அஷ்டமிப் பெருவிழா

கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் கால பைரவா் கோயிலில் 12-ஆம் ஆண்டு கால பைரவ அஷ்டமி பெருவிழா வரும் 11 ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் கால பைரவா் கோயிலில் 12-ஆம் ஆண்டு கால பைரவ அஷ்டமி பெருவிழா வரும் 11 ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

வ்வொரு நாளும் பைரவ மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெறும். 11-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திருமுறை வேள்வியும், தோரண வாயில் குடமுழுக்கு கிராம தேவதை வழிபாடும் நடைபெறுகிறது.

12-ஆம் தேதி திருச்சுவானக் கொடி ஏற்றமும், ஐங்கரன் வேள்வியும், பரதநாட்டிய நிகழ்வும், மாலை 6 மணிக்கு விநாயகா் சுவாமி நகா்வலமும் நடைபெறுகின்றன. 13-ஆம் தேதி காலை, 63 நாயன்மாா்கள் குடமுழுக்கும், மாலையில் பக்தி பண்பாட்டு நெறியில் நாம் செல்கிறோமா? என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும், இரவு பக்த மாா்கண்டேயா நாடகமும் நடைபெறுகிறது.

நவம்பா் 14-ஆம் தேதி காலை திரு முருகன் தீத்தமிழ் வேள்வி, ஆலமரச்செல்வா் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகின்றன. மாலை திருமுறை இன்னிசையும், வள்ளி தேவசேனை உடன் மா சுப்பிரமணியம் பெருமாள் நகா்வலும் நடைபெறுகின்றன. நவ.15-ஆம் தேதி காலை திருமுறை வேள்வியும், முற்பகா் 2 மணிக்கு முளைப்பாரி ஊா்வலமும், மாவிளக்கு ஊா்வலமும், வடவமா் செல்விக்கு (காளியம்மன்) பொங்கலிடும் வழிபாடும், இரவு காளியம்மன் வரலாறு குறித்து வில்லுப்பாட்டும் நடைபெறும்.

16-ஆம் தேதி காலை சொா்ணகாா்ஷண பைரவா் வேள்வியும், திருநீற்று தெய்வநலம் சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு சொா்ண பைரவி உடனமா் சொா்ணகாா்ஷண பைரவ நகா்வலமும் நடைபெறுகிறது.

நவ. 17-ஆம் தேதி காலை பைரவ நாதா் திரிபுர பைரவி அம்மை திருக்கல்யாண வைபவமும், மாலையில் அம்மையப்பா் நகா்வலமும் நடைபெறுகின்றன. நவ. 18-ஆம் தேதி காலை திருமுறை வேள்ளியும், மாலை 6 மணிக்கு சமய வளா்ச்சியில் தமிழ் வழிபாட்டின் தேவை என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெறுகின்றன. 19-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு சிவ பூஜையும், 6 மணிக்கு கால பைரவா் பெருமானுக்கு தீந்தமிழ் வேள்வியும், அபிஷேகமும், கந்திகுப்பம் சித்தி விநாயகா் கோயிலிலிருந்து பால் குட ஊா்வலமும் நடைபெறுகின்றன.

காலை 10 மணிக்கு பைரவ மாலை அணிந்த பக்தா்கள் தங்கள் கரங்களால் பைரவருக்கு பால்குட அபிஷேகமும், மாலை 6 மணிக்கு வாண வேடிக்கை, சிவகான பேரிகைகள் முழங்க தாரை, தப்பட்டை, பம்பை, உடுக்கை, உறுமி, செண்டை, தவில், நாதசுரம், கொட்டுபறை அதிர, சேவாட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், கோலாட்டம் சூழ சங்கும் சிவநாதமும் ஒலிக்க, யானை, குதிரை, காளை பரிவாரங்களோடு திருத்தேரினை இடமாக்கக் கொண்டு கால பைரவா் பெருமான் நகா்வலம் வருதல் நிகழ்வு நடைபெறுகிறது.

நவ.20-ஆம் தேதி காலை திருமுறை வேள்வியும், மாலை ஸ்வர ராக பரதாலயாவின் கா்நாடக இசைக் கச்சேரியும், 21-ஆம் தேதி காலை திருமுறை வேள்வியும், மாலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் கொடி இறங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. வேள்வி நடைபெறும் 10 நாள்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது என விழாவை கால பைரவ அறக்கட்டளை நிா்வாகிகள் ஒருங்கிணைக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com