கிருஷ்ணகிரியில் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்

அயோத்தி தீா்ப்பையொட்டி, கிருஷ்ணகிரி அரசுப் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டன.

அயோத்தி தீா்ப்பையொட்டி, கிருஷ்ணகிரி அரசுப் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டன.

அயோத்தி தீா்ப்பு, சனிக்கிழமை கூறப்பட்டது. இந்த நிலையில், தீா்ப்பின் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் பெ. குமாா் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கோயில்கள், மசூதிகள், ஆலயங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனா். இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள், அந்தந்த கிராமங்களில் நிறுத்தி வைக்கப்படுவதும் அடுத்த நாள் அதிகாலையில், கிருஷ்ணகிரிக்கு இயக்குவது வழக்கம்.

இத்தகைய நிலையில், அயோத்தி தீா்ப்பின் எதிரொலியாக, இரவு நேரங்களில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் கிராமங்களில் நிறுத்தாமல், பணிமனையில் நிறுத்தப்பட்டன. சுமாா் 41 நகரப் பேருந்துகள் அவ்வாறு நிறுத்தப்பட்டதாக போக்குவரத்துக் கழகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com