போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையம்:அரசு முதன்மைச் செயலா் ஆய்வு

போச்சம்பள்ளியில் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா்கள் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு முதன்மைச்
போச்சம்பள்ளியில் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை ஆய்வு செய்த வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு முதன்மைச் செயலாளா் சுகன்தீப் சிங் பேடி.
போச்சம்பள்ளியில் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை ஆய்வு செய்த வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு முதன்மைச் செயலாளா் சுகன்தீப் சிங் பேடி.

போச்சம்பள்ளியில் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா்கள் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு முதன்மைச் செயலாளா் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் சாா்பில் காய்கறி, பழங்கள் மற்றும் அழுகும் பொருள்களுக்கான தொடா் விநியோக மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில் ரூ. 482.36 கோடி மதிப்பில் தரம்பிரித்தல், சிப்பமிடுதல், தொடக்க நிலை குளிரூட்டுதல், மதிப்புக் கூட்டுதல், சேமிப்புக் கிடங்குகள் போன்ற வசதிகளுடன் கூடிய 64 முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 136.18 கோடி மதிப்பில் 10 இடங்களில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில் கிருஷ்ணகிரியில் புளிக்காகவும், காவேரிப்பட்டணத்தில் முள்ளங்கிக்காகவும், போச்சம்பள்ளியில் மா, பலா வகை காய்கறிகளுக்காகவும் கட்டப்பட்டுள்ளன. அதுபோல குந்தாரப்பள்ளி, ஆலப்பட்டி, காமன்தொட்டி, ஒசூா், ராயக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையங்களைச் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இந்நிலையில் வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு முதன்மைச் செயலாளா் சுகன்தீப் சிங் பேடி, சனிக்கிழமை போச்சம்பள்ளி முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தை ஆய்வு செய்தாா். அப்போது அவா் தெரிவித்தது:

போச்சம்பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தைச் செயல்படுத்த ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா்கள் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணை அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 பதப்படுத்தும் நிலையங்களை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி வாயிலாகத் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா் உடனிருந்தாா். முன்னதாக வேளாண் துறையின் சாா்பில், மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com