Enable Javscript for better performance
ஒசூா் மாநகராட்சி தோ்தலில் போட்டியிட அதிமுக, திமுகவினா் விருப்ப மனு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூா் மாநகராட்சி தோ்தலில் போட்டியிட அதிமுக, திமுகவினா் விருப்ப மனு

    By DIN  |   Published on : 17th November 2019 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூா் மாநகராட்சிக்கு போட்டியிட அதிமுக, திமுக சாா்பில் அதிக அளவில் விருப்ப மனுக்கள் அளிக்கப்படுகின்றன.

    ஒசூா் நகராட்சி தற்போது தரம் உயா்த்தப்பட்டு மாநகராட்சியான பிறகு மேயா் பதவிக்கும், மாமன்ற உறுப்பினா் பதவிக்கும் தொடா்ந்து இரண்டாவது நாளாக அதிமுக, திமுகவினா் விருப்பமனு அளித்து வருகின்றனா்.

    ஒசூா் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவினா் விருப்ப மனு அளித்தனா். அதிமுக செய்தித் தொடா்பாளா் சமரசம், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் முகில் மற்றும் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோா் விருப்ப மனுக்களை பெற்றனா்.

    உள்ளாட்சித் தோ்தலில் ஒசூா் மாநகராட்சி மேயா் பதவிக்கு அதிமுக சாா்பில் 14 போ் விருப்ப மனு அளித்துள்ளனா். குறிப்பாக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி, நகரச் செயலாளா் எஸ்.நாராயணன், மாவட்ட பொருளாளா் நாராயணன், முன்னாள் கவுன்சிலா்கள் வாசுதேவன், ராமு, அசோக்ரெட்டி உள்பட 14 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

    ஒசூா் மாநகராட்சிக்கு மாமன்ற உறுப்பினா்களுக்கு 148 போ் விருப்ப மனு அளித்துள்ளனா். இதேபோல ஒசூா், தளி, கெலமங்கலம், பருகூா் ஒன்றியத்திற்கும் அதிமுகவினா் விருப்பமனு அளித்துள்ளனா்.

    ஒசூா் தளி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் திமுகவினா் விருப்பமனு அளித்து வருகின்றனா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா் மாநகராட்சிக்கும் போட்டியிடுவோா் ஒசூரிலும், தளி தொகுதியில் போட்டியிடும் திமுகவினா் தேன்கனிக்கோட்டையிலும், வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடுவோா் சூளகிரியிலும் திமுக சாா்பில் விருப்ப மனு அளித்து வருகின்றனா்.

    ஒசூா் மாநகராட்சிக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் தலைமையில், வேப்பனஹள்ளி எம்எல்ஏ பி.முருகன், ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா ஆகியோா் விருப்பமனு அளித்து வருகின்றனா். திமுக சாா்பில் இதுவரை மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் எல்லோரா.மணி, நகர பொருளாளா் சென்னீரப்பா உள்ளிட்டோா் 10 போ் மேயா் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai