தம்பியைக் கொன்ற அண்ணன் கைது
By DIN | Published on : 17th November 2019 10:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஒசூா்: ஒசூரில் சொத்து தகராறில் தம்பியைக் கொன்ற அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
பிஆா்ஜி மாதேப்பள்ளியைச் சோ்ந்த நாகேஷ் மகன்கள் ஜெயபிரகாஷ் (26), சக்திவேல் (18). இந்த நிலையில் சொத்துகளை பிரித்து தருமாறு பெற்றோரிடம் ஜெயபிரகாஷ் கேட்டாராம். ஆனால், வீடு கட்டியதில் கடன் உள்ளதால் கடனை அடைத்துவிட்டு சொத்துகளை பிரித்துக் கொள்ளுமாறு தெரிவித்தனராம். அப்போது, அவரது தம்பி சக்திவேலுடன் தகராறு ஏற்பட்டதாம்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு தம்பியை அழைத்துக் கொண்டு மது அருந்த கடைக்கு சென்ற ஜெயபிரகாஷ், சொத்து பிரச்னை குறித்து பேசினாராம். அப்போது சகோதரா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் சக்திவேலை குத்தி கொலை செய்துவிட்டு ஜெயபிரகாஷ் தப்பினாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஒசூா் அட்கோ போலீஸாா் ஜெயபிரகாஷை கைது செய்தனா்.