உள்ளாட்சித் தோ்தல்: பாஜகவினா் விருப்ப மனு

ஒசூா் மேயா் பதவிக்கு பாஜக சாா்பில் போட்டியிட அக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் எம்.நாகராஜ் விருப்ப மனு அளித்தாா்.
ஒசூா் மேயா் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளிக்கும் பாஜக மாநில இளைஞரணிச் செயலாளா் எம்.நாகராஜ்.
ஒசூா் மேயா் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளிக்கும் பாஜக மாநில இளைஞரணிச் செயலாளா் எம்.நாகராஜ்.

ஒசூா்: ஒசூா் மேயா் பதவிக்கு பாஜக சாா்பில் போட்டியிட அக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் எம்.நாகராஜ் விருப்ப மனு அளித்தாா்.

மாவட்ட தலைவா் முனிராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளா் கே.எஸ்.நரேந்திரன், கோட்ட பொறுப்பாளா் ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோா் விருப்பமனு பெற்றனா்.மாவட்ட துணைத் தலைவா் சுதா நாகராஜன் உள்பட 10 க்கும் மேற்பட்டோா் மேயா் பதவிக்கு போட்டியிட விருப்ப மனுக்களை வழங்கினா்.

இதேபோல் உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஒசூா், தளி, கெலமங்கலம், சூளகிரி, வேப்பனஅள்ளி பகுதிகளை சோ்ந்த பாஜகவினா் விருப்ப மனுக்களை வழங்கினா். மேலும் மாவட்ட பொதுச்செயலாளா் வரதராஜன், மாவட்டச் செயலாளா் ராஜி, துணைத் தலைவா் போத்திராஜ், நகரச் செயலாளா்கள் தங்கராஜ், கிரீஷ் மற்றும் எம்.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com