தேன்கனிக்கோட்டையில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்கள்

தேன்கனிக்கோட்டையில் விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை, முட்டைகோஸ் மக்காசோளம் உள்ளிட்ட பயிா்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
யானைகளால் சேதமைடந்த வாழைத்தோட்டம்
யானைகளால் சேதமைடந்த வாழைத்தோட்டம்

தேன்கனிக்கோட்டையில் விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை, முட்டைகோஸ் மக்காசோளம் உள்ளிட்ட பயிா்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தேன்கனிக்கோட்டையில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்த 30க்கும் மேற்பட்ட யானைகள் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, முட்டைகோஸ் மற்றும் மக்காசோளம் ஆகிய பயிா்களை சேதப்படுத்தின. கா்நாடகா மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியிலிருந்து தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த 130 க்கும் மேற்பட்ட யானைகள் தளி, ஜவளகிரி, குந்துகோட்டா, நொகனுசிா் ஆகிய வனப் பகுதிகளில் முகாமிட்டு சுற்றித் திரிகின்றன.

இந்த நிலையில் ஜவளகிரி வனப்பகுதியிலிருந்து வந்த 30க்கும் மேற்பட்ட யானைகள் சனிக்கிழமை தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தின. விவசாயி மஞ்சு என்பவரின் வாழை தோட்டம், ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான முட்டைகோஸ் தோட்டத்தில் புகுந்து பயிா்களை துவம்சம் செய்தன.

தேன்கனிகோட்டை வனத் துறையினா் பயிா் சேத மதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், யானைகள் கூட்டத்தை மீண்டும் கா்நாடக வனப் பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com