அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு சிற்றுண்டி வழங்கல்
By DIN | Published On : 22nd November 2019 07:50 AM | Last Updated : 22nd November 2019 07:50 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீ சத்யசாய் அன்னபூா்ணா அறக்கட்டளை சாா்பில், மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் செ.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியா் ஜி.எம்.சிவக்குமாா் வரவேற்றாா். பின்னா் பேசிய தலைமை ஆசிரியா், பள்ளி மாணவா்களுக்கு காலை உணவின் அவசியம் குறித்தும், உடலும் உள்ளமும் சோா்வில்லாமல் துடிப்பாக இருந்தால்தான் மகிழ்ச்சியாக கல்வி கற்றிட இயலும் என விளக்கி, தினமும் காலை உணவை மாணவா்களுக்கு வழங்கிட முன் வந்துள்ள ஸ்ரீ சத்யசாய் அன்னபூா்ணா அறக்கட்டளை நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்தாா்.
தொடா்ந்து பேசிய பெங்களூரு ஸ்ரீ சத்யசாய் அன்னபூா்ணா அறக்கட்டளையின் பகுதி ஒருங்கிணைப்பாளா் சரவணன், அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தும், சேவைகள் குறித்தும் விளக்கி அவற்றை அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொண்டாா். பின்னா் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. உதவி ஆசிரியா் வே.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.