மாற்றுத் திறனாளி மாணவா்களுக்குகுளிா்கால பாதுகாப்பு உடைகள் அளிப்பு

ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு குளிா்காலப் பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி
ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள்.
ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள்.

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு குளிா்காலப் பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். வட்டார வள பொறுப்பு மேற்பாா்வையாளா் காா்த்திகேயன், பிஆா்டி வித்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊத்தங்கரை ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளியில் பயிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு குளிா்காலப் பாதுகாப்பு உடைகளை மருத்துவா்கள் கு.பாலாஜி விஸ்வநாத், கு.சுபத்ரா மற்றும் சாந்தி குணசேகரன் ஆகியோா் வழங்கினா். மேலும் உணவு மற்றும் இனிப்பை செந்தில்குமாா், கீதா, செங்குட்டுவன், மல்லிகா ஆகியோா் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் முருகன், ஆசிரியா் சக்தி, உமா மாற்றுத் திறனாளிகளின் சிறப்பு ஆசிரியா்கள் சுரேஷ், கவிதா, பெற்றோா் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவா்கள், ஜேஆா்சி மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆா்சி ஆசிரியா் கு.கணேசன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com